இன்று மறுப்பதினால் வழிகேடு அன்று மட்டும் நேர்வழியா?

உண்மையில் இந்நிலைபாட்டை இவர்கள் எடுத்ததற்கான காரணம் நேர்வழியை இவர்கள் தெரிந்து கொண்டதல்ல. மாறாக பீ.ஜெ என்ற தனிமனிதன் மீது கொண்ட வெறுப்பும், அரபுப் பண ஈர்ப்பும் தான் என்பதுதான் உண்மை.
காரணம் சகோதரர் பீ.ஜெ அவர்கள் என்றைக்கு வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் பணத்தை வைத்து தஃவா செய்ய மாட்டேன் என்ற நிலைபாட்டை அறிவித்தாரோ அன்றுதான் பீ.ஜெ யுன் முரன்படும் நிலைபாடு இந்த பச்சோந்தி போலி தவ்ஹீத் வாதிகளினால் எடுக்கப்பட்டது.
அது வரை காலம் சிறந்த அறிஞர் என்று அவர்கள் வாயினாலே சொல்லப்பட்டு வந்தவர் என்றைக்கு நிறுவனங்களின் பணத்தை எதிர்த்தாரோ அன்றிலிருந்து வழிகேடராக, முஃதஸிலாவாக இவர்களினால் விமர்சிக்கப்பட்டார்.
சகோதரர் பீ.ஜெ அவர்கள் 2000 ம் ஆண்டு நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை மறுக்கப்பட வேண்டியவை என்பதை தெளிவாக எடுத்துரைத்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.

2000 ம் ஆண்டே சகோதரர் பீ.ஜெ அவர்கள் நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றிய போது குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை மறுக்க வேண்டும் என்று உரையாற்றியுள்ளார். இந்த உரைகளை அந்த நாட்களில் இலங்கை முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை உண்மையில் பள்ளி கட்டும் தொழில் நிறுவனமான JASM புத்தக சாலையான “அஸ்ஸலபிய்யா” புத்தக நிலையத்தையே சாரும்.
2000ம் ஆண்டு இக்கருத்தை பீ.ஜெ அவர்கள் சொல்லும் போது அதை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்து, கொண்டு சேர்த்தவர்கள் இப்போது எதிர்ப்பதின் மர்மம் என்ன ஆய்வின் தெளிவா, அரபுப் பணத்தின் மோகமா?
இலங்கையில் பள்ளி கட்டும் தொழில் நிறுவனமான JASM ன் பத்திரிக்கையான உண்மை உதயத்தில் சகோதரர் பீ.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்திற்கு விளம்பரம் செய்தார்கள்.
சகோதரர் பீ.ஜெ அவர்கள் மொழியாக்கம் செய்த குர்ஆன் மொழிபெயர்ப்பு 2002 ம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிடப்படுகின்றது. இதனையும் இலங்கை மக்களுக்கு மத்தியில் முதன் முதலில் கொண்டு சேர்த்தவர்கள் இதே JASM தான்.
2000 ம் ஆண்டே குர்ஆனுக்கு முரண்பட்டால் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று உரையாற்றுகின்றார் பீ.ஜெ அந்த CD க்களை இலங்கையில் பரப்பினார்கள். 2002 ம் ஆண்டு குர்ஆன் மொழியாக்கம் வெளியிட்டார் அதனையும் இலங்கையில் பரப்பினார்கள். இது வரைக்கும் இவர்களின் பார்வையில் பீ.ஜெ சிறந்த அறிஞர்.
2005 ம் ஆண்டு நிதி நிறுவனங்களின் பணத்தை வைத்து தஃவா செய்யமாட்டேன் என்ற நிலைபாட்டை பீ.ஜெ எடுத்தார் அன்று முதல் பீ.ஜெ இவர்களின் பார்வையில் வழிகெட்டுவிட்டார்.