திரையரங்குகளின் கட்டணத்தை ரூ. 160 வரை உய்ரத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை கொண்டுவர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை எவ்வளவு அதிகரிக்கலாம் என்று அனுமதி அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

சென்னையில் ஏசி மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 160ம் குறைந்தபட்சமாக ரூ 50ம் கட்டணமாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 120ம் குறைந்தபட்சம் ரூ. 40ம் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.

Tamilnadu government allowed to increase the cinema ticket rates ranging from Rs. 160, and fixed seperate slabs vice corporation, municipality and panchayats cinema theatres.