இந்திய அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் தனது குழந்தையுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு வந்துவிட்ட நிலையில், சீனியர் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக உள்ளார்.
இந்திய அணியில் முன்னனி சுழல் பந்து வீரனாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவருக்கு பின்னர் வந்த இளம் வீரர்களால் ஹர்பஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. தற்போது ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஹர்பஜன் குழந்தை ஹினய ஹீரா பிளஹாவுக்கு தற்போது 1 1/4 வயதாகிறது. ஹீராவுடன் ஹர்பஜன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஹர்பஜன் வெளியிட்ட வீடியோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

senior indian cricket player harbajan playing cricket with his daughter