Surprise Me!

தடை செய்யும் வரை போராட்டம் தொடரும் மீனவர்கள் அறிவிப்பு-வீடியோ

2017-10-24 182 Dailymotion

சீன என்ஜீன்களுக்கு தடை விதிக்கும்வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் அறிவிப்பு ,

தடை செய்யப்பட்ட சீன எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக புகார் கூறி காசி மேடு மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் காசிமேடு பகுதியே போர்க்களமானது.

அதிவேக எஞ்சினைக் கொண்டு விசைப்படகுகளில் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்பது காசிமேடு மீனவர்களின் புகார். அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள்தான் இந்த படகுகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி காசி மேட்டில் மீனவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியலின் போது பலர் கருங்கற்களை வீசி எறிந்தனர். இதில் சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் மீனவர்கள் பலர் காயமடைந்தனர்.

Fishers protest in chennai kasimedu

Buy Now on CodeCanyon