தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு மூன்று மாதங்களில், ஏழு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்ததாக, பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது.
பாகிஸ்தானுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வென்று அசத்திய இலங்கை அணி, அடுத்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரில் இலங்கை விளையாட உள்ளது. வரும் 26, 27ல் நடக்க உள்ள இரண்டு போட்டிகள் அபுதாபியிலும், 29ம் தேதி போட்டி லாகூரிலும் நடக்க உள்ளது.

இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக இருந்த உபுல் தரங்கா, டி-20 போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Srilanka cricket team had 7 captains in 3 months