வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையாலும், வெப்பசலனத்தாலும் அவ்வப்போது மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பின.

இந்நிலையில் தமிழகத்துக்கு மழையை அளிக்கும் வடகிழக்கு பருவமழை 26-ஆம் தேதிக்கு மேல் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே இன்று சென்னையில் அநேக இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மயிலாப்பூரில் கனமழை கொட்டி வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

Rain hits in Chennai

North East Monsoon is going to start within one or two days, Rain hits in Chennai. People are happy. But motorists affected because of traffic jam.