புனேவில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில இந்தியா அபார வெற்றி பெற்றது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர். இதையடுத்து இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது.
231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

india beat new zealand by 6 wickets in second odi in pune