டெங்குவை ஒழிக்க ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொழுதை கழிக்க பெண் அதிகாரி ஒருவர் கோலம் போட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதனால் சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தினந்தோறும் குறைந்தது 6 பேருக்கு மேல் இறந்த வண்ணம் உள்ளனர். வடகிழக்கு பருவமழை வேறு தொடங்கவுள்ள நிலையில் இந்த காய்ச்சலால் தமிழகமே பீதிஅடைந்துள்ளது.

தமிழக அரசும் அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆய்வு நடத்தி டெங்குவை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Sivagangai Collector conducts review meeting on Dengue protection process. A lady officer who gets bore on this meeting puts rangoli in paper