Surprise Me!

வட சென்னைக்கு ஆபத்து.. கமல்ஹாசன் எச்சரிக்கை !

2017-10-27 7,815 Dailymotion

எண்ணூர் துறைமுகத்தை உதாசீனம் செய்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று காலை, டிவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது: "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே" இவ்வாறு குறிப்பிட்டுள்ள கமல், அந்த டிவிட்டின் கீழே சில தகவல்களை இணைத்துள்ளார். <br />அதில், கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரியி ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவவிட்டோம். <br /> <br />kamal haasan request state government to save north Chennai in his tweets

Buy Now on CodeCanyon