நவம்பர் 1ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக அரசு ஒரு நபருக்கு 500 கிராம் சர்க்கரரை என்ற அளவில் அதிகபட்சம் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ சர்க்கரை வழங்கி வருகிறது. சர்க்கரை கார்டுகளுக்கு ஒரு நபருக்கு 1.5 கிலோ வீதம் அதிகபட்சமாக ஒருகுடும்பத்திற்கு மாதம் 5 கிலோ வரை வழங்கப்படுகிறது. இந்த சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. 2005-2006ல் 21 ஆயிரம் மெட்ரிக்டன் சர்க்கரை ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டது. 2016-17ல் இந்த அளவு 33,636 மெட்ரிக் டன்னாக உயர்ந்து விட்டது.

Tamil Nadu govt hikes sugar price in ration shops at the ration shops to Rs 25 per kg, with the price hike to be effective from November 1.