மாசடைந்து போன கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதியை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் என சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று கூறியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். அத்துடன் இன்று அதிகாலை கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியில் திடீர் கள ஆய்வும் கமல் மேற்கொண்டார்.

இது குறித்து அவருடன் சென்றிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் தமிழ் ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்புப் பேட்டி: கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவு கலக்கும் விவகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே நடிகர் கமல்ஹாசன் விவரங்களை சேகரித்தார். அத்தோடு, நாங்களும் நேரில் சென்று அவரை சந்தித்து பல தரவுகளை கொடுத்து பேசிவந்தோம்.

Kamal has visited Ennore not as actor, he understood the issue well, says Environment Activist Nityanand Jayaraman, who accompany with him.