சென்னையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டியும் விளாசித் தள்ளியதால் தலைநகரம் ஸ்தம்பித்துப் போனது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது.
நேற்று சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மிதமான வெயில் நிலவி வந்தது. திடீரென மதியம் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தூறலுடன் மிதமான மழை பெய்தது. மாலை 4 மணிக்கு மேல் மழை தீவிரமானது. சென்னையின் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கனமழை பெய்து வருகிறது.

வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்

Severe flood in Chennai Mylapore due to heavy rain. No power, no transport facility in Mylapore due to heavy rain.