சவுதி அரேபியாவில் ஹெலிக்காப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இளவரசர் மன்சூர் பின் முக்ரின் உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின். அவர் ஆஸிர் மாகாணத்தின் துணை மேயராக உள்ளார்.
இவர் ஏமன் எல்லைப் பகுதியில் நேற்று ஆய்வு செய்ய 7 பேர் அதிகாரிகள் குழுவுடன் நேற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது ஹெலிகாப்டர் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் மறைந்த அபா பகுதியில் அந்நாட்டு மீட்புப்படையினர் தேடுதல்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரியாத்தில் இருந்து 520 மைல் தொலைவில் ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஹெலிக்காப்டரில் இருந்த இளவரசர் மன்சூர் பின் முக்ரின் மற்றும் 7 அதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A helicopter carrying a high-ranking Saudi prince and other government officials crashed Sunday in the kingdom's south near the border with Yemen, reportedly killing all eight people aboard.