இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்க உள்ளது. கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் கடைசி போட்டியிலேயே தொடர் வெற்றிக்கான முடிவு தெரிந்தது.
அதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது. நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. டில்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி-20ல் நியூசிலாந்து வென்றது. இன்று திருவனந்தபுரத்தில் நடக்கும் மூன்றாவது போட்டியில் வெல்லும் அணியே இந்தத் தொடரை வெல்லும்

இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால், போட்டி மிகவும் கடினமாகவே இருக்கும். அதுவும் ராஜ்கோட்டில் கோலின் முன்ரோ, 59 பந்துகளில் 109 ரன்கள் அடித்து, வெற்றியை உறுதி செய்தார்.

India, New Zealand T20 series decider today, Toss delayed due to rain