சசிகலாவை பார்க்க டிடிவி தினகரன் பெங்களூரு சென்று விட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய நிலையில் இன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். <br />சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கணவர் நடராஜனை பார்க்க கடந்த மாதம் சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். அதன்பிறகு அவரை உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை <br />இந்நிலையில்,நேற்று பிற்பகல் தனது மனைவி மகளுடன் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார் தினகரன். இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர். <br /> <br />IT officials are raiding Dinakaran's house in Chennai as he is staying in Bangalore.Income Tax Dept Raid is being conducted in more than 100 places related to Sasikala and her family