சென்னையில் அண்மையில் சிக்கிய ஜூவல்லரி ஓனர் ஒருவர் காட்டிக் கொடுத்ததன் அடிப்படையில் ஜெயலலிதா மற்றும் சசிகலா பதுக்கி வைத்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதி0ப்பிலான வருமான வரித்துறை அதிகாரிகள் தேடுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளன. 2011-ல் ஆட்சிக்கு ஜெயலலிதா மீண்டும் வந்ததைத் தொடர்ந்து அசையா சொத்துகள் வாங்கி குவிப்பதை அவருடன் இருந்த சசிகலா குடும்பம் நிறுத்திக் கொண்டது. வாங்கிக் குவித்த சொத்துகளை லாவகமாக பதுக்குவதிலேயே மிகவும் மும்முரமாக இருந்தார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஏராளமான ஆவணங்கள் பதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டுக்குப் பின் இதன் அடுத்த கட்டம் நடந்திருக்கிறது.அதாவது சேர்த்து வைக்கப்பட்ட ரொக்கப் பணம் அத்தனையுமே வைரமாக மாற்றும் மிகப் பெரிய ஆபரேஷன் நடந்திருக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றுதான் உதவியிருக்கிறது. இதை கண்காணித்து வந்தது வருமான வரித்துறை. <br /> <br />நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடந்த போது இந்த நகை கடையும் சிக்கியிருந்தது. இதன் உரிமையாளர் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்த வேண்டிய முறையில் நடத்தப்பட்ட விசாரணையில்தான் ஜெயலலிதா, சசிகலா எப்படியெல்லாம் வைரங்களாக மாற்றினர்; தாம் அதற்கு அப்படியெல்லாம் உதவினேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். <br /> <br />According to the sources Sasikala and her family memebers had converted their money into the Diamonds.