ஜெயலலிதா சிகிச்சை சிடி இருப்பதாக திவாகரன் மகன் ஜெயானந்த் கொளுத்திப் போட்ட ஃபேஸ்புக் பதிவால் இப்போது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியிருக்கிறது என குமுறுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.

திவாகரனும் தினகரனும் ராசியாகிவிட்டோம் என என்னதான் கூறிவந்தாலும் இருதரப்புக்குமான புகைச்சல் குறைந்தபாடில்லை. இப்போது சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 355 பேர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கி உள்ளனர்.
குறிப்பாக இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் 5 நாட்களாக வருமானவரித்துறையின் பிடியில் உள்ளனர். திவாகரனின் கல்லூரியிலும் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

வருமான வரித்துறை வட்டாரங்களோ, போலி நிறுவனங்களின் பெயரில் கருப்புப் பண பரிமாற்றம் நடந்தது என்பதால்தான் இந்த சோதனை என்கிறது. ஆனால் தினகரன் தரப்போ, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிடியைத்தான் தேடுகிறார்கள் என்கிறது.

TTV Dinakaran supporters disappointed over Sasikala Brother Divakaran's son Jeyananth for his facebook post on Jayalalithaa treatemetn video