கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டினோ ரொனால்டோவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் 32 வயதான ரொனால்டோ, இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுகிறார். இவருடன் மெஸ்சி, நெய்மர் ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர் என்ற மகன் உள்னான். இவர் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தான். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வரும் ஜூனியரின் தாயார் குறித்து ரொனால்டோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பிணியான அவருக்கு நேற்று கிறிஸ்டியானோவின் சொந்த ஊர் அருகில் உள்ள குய்ரோன் யுனிவர்சல் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அலானா மார்ட்டினா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Cristiano Ronaldo and his girlfriend, model Georgina Rodriguez, are officially parents to their new baby girl, Alana Martina.
On Sunday, the 32-year-old soccer superstar tweeted a pic from the hospital of Rodriguez lying in bed with their new baby, as he and his 7-year-old son, Cristiano Ronaldo Jr., smile proudly.