Surprise Me!

அடி வயிற்றில் பாறாங்கல்லை இறக்கினால் எப்படி அமைச்சரே?- வீடியோ

2017-11-16 2,381 Dailymotion

ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு கிடையாது என்று தமிழக அமைச்சர் காமராஜ் கூறியிருப்பது மக்களின் அடிவயிற்றில் பாறாங்கல்லை இறக்கியது போல உள்ளது. இதுகுறித்து இல்லத்தரசிகள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், அன்றாடங்காய்ச்சிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்படி மொத்தமாக இல்லை என்று கூறினால் எப்படி என்ற கவலையில் அவர்கள் உள்ளனர். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நமது வாசகர் தனிஷ்ஸ்ரீ எழுதியுள்ள ஒரு ஆதங்கக் கட்டுரை:

அமைச்சர் காமராஜ் அவர்களின் அறிவிப்பு அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் இன்னுமொரு பாறாங்கல்லை போட்டிருக்கிறது. ஆம்! உளுந்தை பற்றி அறிக்கை விட்டு இந்த ரேஷன் கடைகளின் மூடு விழாவுக்கான முதல் அறிக்கையை மறைமுகமாக செய்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் கல்வி தரத்தை உயர்த்த, மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கர்மவீரர் காமராஜர் சத்துணவு திட்டத்தை வகுத்தார். ஆனால் நம் அமைச்சர் காமராஜோ, இருக்கிற திட்டத்திலிருந்து உளுத்தம் பருப்பை எடுத்து நாட்டின் கஜானாவுக்கு நன்மைகளை வழங்கியுள்ளார்.

Women in Tamil Nadu are worried over the minister Kamaraj's announcement on Black gram sales in PDS shops.

Buy Now on CodeCanyon