இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்துள்ளதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது. தேசிய கீதம் பாடும் போது அவர் பபுள் கம் மென்ற வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவம் நேற்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடத்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நடந்து இருக்கிறது. இதனால் கோஹ்லி பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.
சமூக வலை தளங்களில் பலர் கோஹ்லிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்

கொல்கத்தாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் பேட்டிங் இதில் மிகவும் மோசமாக இருந்தது. கோஹ்லி வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியே சென்றார்.

Virat Kohli chews gum during national anthem in India-Sri Lanka 1st Test. Jammu Kashmir cricketer Parvez Rasool had faced same criticism for the similar actions in Indian team.