ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபடும், அப்படி பிரிந்தால் எந்த அணியுடனும் கூட்டணி வைக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சொல்லிவிட்டு சென்றதாக அந்த கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஜெயா டிவியின் விடைக்குள் வினா நிகழ்ச்சியில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் நெறியாளரின் கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளித்தார். அப்போது தற்போதைய அரசியல் சூழலில் கருணாநிதி இருந்திருந்தால் காட்சிகளே மாறி இருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்களே.

அவ்வாறு கருணாநிதி இருந்திருந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும் என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன்,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கருணாநிதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் முன்னர் அவர் நான், ராஜா, பொன்முடி உள்ளிட்டோர் இருந்த போது ஒரு ஒரு செய்தியை சொல்லிவிட்டுப் போனார்.

DMK principal secretary Duraimurugan says Karunanidhi pre calculated the fate of ADMK before he hospitalised and strictly said DMK will not ally with any splitted ADMK faction.