அதிமுகவின் அரண்மை அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறவர் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் என மற்றொரு எம்.பியான அன்வர் ராஜா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் மனங்கள் இணையவில்லை என மைத்ரேயன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.பி. அன்வர்ராஜா கூறியதாவது:மைத்ரேயன் சார் ஆளுமை மிக்க மனிதர். நான் அதை இல்லை என்று மறுக்கவில்லை. பாரதப் பிரதமரை நேரடியாக அறிந்தவர். எல்லா மேல்மட்ட அரசியல்களையும் உணர்ந்தவர்.. பேலஸ் பாலிட்டிக்ஸ் (அரண்மை அரசியல்) எப்படி செய்வது என்பது அவருக்கு தெரியும்.

அப்படிப்பட்ட ஒருவருடைய மனக்குறையை தீர்த்து வைக்கக் கூடிய நடவடிக்கையை எங்கள் தலைவர்கள் நிச்சயமாக எடுப்பார்கள். தற்போது நடப்பது அரண்மை அரசியல்தான்.
அரசியலில் பேலஸ் பாலிட்டிக்ஸ், பிளாட்பார்ம் பாலிட்டிக்ஸ் இருக்கின்றன. இதில் பேலஸ் பாலிட்டிக்ஸ் என்பது 5 ஆண்டுகள் தொடர்ந்து அரசு நடத்துவதற்கானது; பிளாட்பார்ம் பாலிட்டிக்ஸ் என்பது 5 ஆண்டுக்கு ஒருமுறை மக்களை சந்திப்பது.

AIADMK MP Anwar Raja revealed that the Rajya Sabha MP Maitreyan's Palace Politics in the TV debate.