Surprise Me!

தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு.. பயந்துபோன தீபிகா..வீடியோ

2017-11-22 2 Dailymotion

தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்புகளை தீபிகா படுகோன் ரத்து செய்துள்ளார். நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ராஜபுத்திர இனத்தவர்களும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தீபிகா படுகோன் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பட எதிர்ப்பாளர்கள் லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது போல் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று எச்சரித்தனர். தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகா சபா அறிவித்தது.

Deepika padukone has canceled her shootings and programs suddenly. She is feared of the threatens of Padmavathi movie controversy.

Buy Now on CodeCanyon