மைசூரைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற 85 வயது பிச்சை எடுக்கும் பாட்டி, தான் தினசரி பிச்சை எடுக்கும் கோவிலுக்கே ரூ. 2.5 லட்சம் தானமாக கொடுத்து அனைவரின் மூக்கிலும் விரலை வைக்கச் செய்துள்ளார்.
வொன்டிக்கொப்பல் என்ற இடத்தில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோவில் முன்புதான் சீதாலட்சுமி தினசரி பிச்சை எடுப்பது வழக்கம்.
பிச்சை எடுக்கும் பணத்தில் தனக்குப் போக மீதமுள்ள பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளார் சீதாலட்சுமி பாட்டி. அந்தப் பணத்தைத்தான் தற்போது கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட பத்து வருட கால சேமிப்பாம் இது.

முன்பு இவர் வீட்டு வேலை பார்த்து வந்தார். ஆனால் வயோதிகம் அதிலிருந்து அவரை முடக்கி விட்டது. இதையடுத்து பிச்சை எடுத்து வயிற்றுப்பாட்டைக் கவனிக்க ஆரம்பித்தார். கடந்த பத்து வருடமாக பிச்சை எடுத்து வருகிறார்.

MV Sitalakshmi, 85, a beggar from cultural city, who donated a sum of 2.5 lakhs to Prasanna Anjaneya Swamy Temple, Vontikoppal. It was the money that she had earned over a decade's through begging