நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா தனது 31-வது பிறந்தநாளை மனைவி சமந்தா மற்றும் தான் தற்போது நடித்துவரும் 'சாவ்யாசாச்சி' படக்குழுவினரோடு கொண்டாடி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு திருமணமான சைதன்யாவுக்கு இது ஸ்பெஷல் பிறந்தநாள். ஏனெனில், கடந்த முறை காதலி சமந்தாவோடு கொண்டாடிய பிறந்த நாளை இந்தமுறை மனைவி சமந்தாவோடு கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துக் கொண்டிருந்த சமந்தா கணவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஐதராபாத் பறந்திருக்கிறார்.

சமந்தா தனது கணவர் சைதன்யாவோடு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பிறந்தநாள் கேக் வெட்டும் சைதன்யாவை சமந்தா முத்தமிட்டு வாழ்த்துகளைப் பரிமாறியிருக்கிறார்.

திரையுலகப் பிரபலங்கள் பலர் சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். சைதன்யாவின் தம்பி அகில், 'உலகிலேயே எனக்குப் பிடித்த நபர் நீதான்' என நெகிழ்ச்சியோடு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்.

Naga Chaitanya is celebrating his 31st birthday with his wife Samantha and 'Savyasachi' team. This is a special birthday to chaitanya, he married samantha few days ago. Samantha shared her birthday wishes with her husband Chaitanya and shared video on Instagram.