பிரதமர் நரேந்திர மோடியை துக்ளக் என காட்டமாக விமர்சித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது என தொழில்நிறுவனங்களை மிரட்டுகிறீர்கள்; அவர்களோ மேற்கு வங்கத்தை விட்டு நாங்கள் போக முடியாது என அடம் பிடிக்கிறார். ஏனெனில் அவர்களது தொழில் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்துக்கான தொழில்துறை திட்டங்களுக்கு ஏன் ஒப்புதல் தராமல் இருக்கிறீர்கள்?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது அல்ல. இப்படியான ஒரு முடிவு எடுக்கப்படுவதை இந்த நாட்டின் நிதி அமைச்சர் கூட அறிந்திருக்கவில்லை.

நீங்கள் என்ன துக்ளக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டோம் என்கிறார்கள். உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான் காஷ்மீரில் பயங்கரவாதம் 12% அதிகரித்துள்ளது.

West Bengal Chief Minister Mamata Banerjee on Friday lashed out at Prime Minister Narendra Modi.