Surprise Me!

இரட்டை இலை சின்னத்தை உருவாக்கிய மாயத்தேவர் சிறப்பு நேர்காணல்- வீடியோ

2017-11-25 4 Dailymotion

கடந்த 1973ம் ஆண்டு லோக்சபா இடைத்தேர்தலில் அதிமுக முதன்முறையாக போட்டியிட்டது. தேர்தலில் வழக்கறிஞர் மாயத்தேவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது தான் முதன் முறையாக இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்து அதில் நின்று வெற்றி பெற்ற மாயத்தேவரும் அவரது மனைவியும் ஒன் இந்தியாவிற்கு பிரத்தேக பேட்டியளித்தை காணலாம். <br /> <br />அதிமுகவின் துணை பொதுச்செயலர் என கூறி வரும் தினகரன் கட்சியை வழிநடத்த லாயக்கில்லாதவர் என அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை உருவாக்கித் தந்த திண்டுக்கல் மாயத்தேவர் கடுமையாக சாடியுள்ளார். 1973-ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா இடைத் தேர்தலில் முதன் முதலாக அதிமுக போட்டியிட்டது. அப்போது அதிமுக வேட்பாளராக மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். மாயத்தேவர்தான் இரட்டை இலையை அதிமுகவின் சின்னமாக தேர்வு செய்தார். அத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுகவின் பொன். முத்துராமலிங்கம் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் வெற்றி சின்னமானது இரட்டை இலை. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட இரட்டை இலை சின்னம் முடங்கியது. தற்போது மதுசூதனன் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. <br />

Buy Now on CodeCanyon