மத்தியப் பிரதேசத்தில் மாநிலத்தில் ரகசியமாக இரும்பு பொருள்களை சாப்பிட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து 5 கிலோ எடை கொண்ட இரும்பு பொருள்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். சாத்னா மாவட்டம், சோஹாவாலை சேர்ந்தவர் முகமது மக்சூட் (32). இவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 18-ஆம் தேதி சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த இளைஞரின் உடலை மருத்துவர்கள் ஆய்வு செய்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

அந்த இளைஞருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில ஏதோ சில பொருள்கள் இருப்பது போன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இளைஞர் முகமதுவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தது. அவரது வயிற்றிலிருந்து 10-12 ஷேவிங் பிளேடுகள், 4 பெரிய ஊசிகள், செயின், 263 நாணயங்கள், கண்ணாடி துண்டுகளை மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அகற்றினர்.

Doctors of Madhya Pradesh do a rare surgery for 32 years old man for having 5 kg of iron objects in his stomach.