ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிடக் கூடாது என பெங்களூரு சிறையில் சசிகலா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் சசிகலாவை மீறி தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என சபதம் போட்டுவிட்டு திரும்பியிருக்கிறாராம் தினகரன்.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் அவரது சொந்தங்கள் அரசியலில் தலையெடுக்க மாட்டார்கள் என டெல்லி நினைத்தது. ஆனால் தினகரன் தடாலடி காட்டினார்.
இதனால் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரன் சிறைக்குப் போக நேரிட்டது. சிறையில் இருந்து தினகரன் வந்த போது அதிமுக எடப்பாடியார் வசம் போனது.இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆனாலும் தினகரன் சவுண்டு கொடுத்து வந்தது டெல்லியை கடுப்பேற்றியது. இதன்பின்னர் ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பமே வருமான வரித்துறையில் சிக்கியது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு என அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடுவேன் என தினகரன் அடம்பிடிக்கிறார்.

ஆனால் நடராஜன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதனால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்தார். அந்த சந்திப்பின் போதும் தினகரனை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றே சசிகலா சொல்லியிருக்கிறார்.

Sasikala who was served jail term in Bengaluru also opposed to Dinakaran to contest in RK Nagar By Poll, sources said.