Surprise Me!

நடிச்சா இவர் கூட நடிக்கணும்...உலக அழகியின் விருப்பம்!- வீடியோ

2017-11-30 7,625 Dailymotion

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார். 108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக அழகி போட்டி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. இதில் இன்று வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மனுஷி சில்லார் 2017-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றதையடுத்து அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது.

மனுஷி சில்லார் மருத்துவம் படித்து வருகிறார். உலக அழகி பட்டம் வென்றதோடு இந்தியா திரும்பிய மானுஷி செய்தியாளர்களை சந்தித்தார். தன்னோடு போட்டியில் கலந்துகொண்ட சக அழகிகள் தன்னை பாலிவுட் நடிகை என நினைத்ததாகக் கூறியிருக்கிறார் மனுஷி சில்லார்.

தனது அபிமான நடிகை பிரியங்கா சோப்ரா எனவும் தெரிவித்துள்ளார். அவரிடத்தில் பாலிவுட் நடிக்க ஆசை இருக்கிறதா என்று கேட்டபோது, இதுவரை அதுபற்றி பெரிதாகச் சிந்திக்கவில்லை.

ஆனால் அந்த ஆசை உள்ளது என்றதோடு, ஆமீர் கான் உடன் நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். ஆமீர் கானின் படங்கள் தான் சவால்கள் நிறைந்ததாகவும் சமூக கருத்துக்கள் உள்ளதாகவும் இருக்கும். ஆகவே அவருடன் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Miss world Manushi chhillar returned to India and met with reporters. She said "I want to act with Aamir Khan. The films of Aamir Khan are challenging and social ideas. So I want to play with him."

Buy Now on CodeCanyon