Surprise Me!

காதல் தோல்விக்கு மருந்தாக சென்ற என்னை அவன் பசிக்கு இரையாக்கிவிட்டான்!- வீடியோ

2017-12-04 3 Dailymotion

நான் அப்போது பத்தாம் வகுப்பு தான் முடித்திருந்தேன்... நான் அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவள்.. என் உலத்திற்கு நானே ராணி...! எனக்கு தன்னம்பிக்கை என்பது அதிகம். நாங்கள் ஒரு அப்பர்ட்மெண்ட்டில் வசித்து வந்தோம்.. நான் நன்றாக பேசுவேன்.. எனக்கு துணிச்சல் மிக அதிகம்...! என் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது...! அப்போது கோடைவிடுமுறை என்பதால் என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களது தங்கை அவர்களது வீட்டிற்கு வந்திருந்தாள்.. விடுமுறைக்காக தன் அக்காவின் வீட்டிற்கு வந்திருந்த சோனாவும் நானும் சந்தித்திக் கொண்டோம்.. பல கதைகளை பேசி எங்களது பொழுதுகளை ஒன்றாக கழித்தோம். அப்போது தான் அவள் தனது பாய் பிரண்டை பற்றி சொன்னாள்.. அவனது பெயர் அனிஷ். அவனை பற்றி நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டாள்.. அதுமட்டுமில்லாமல் எனக்கு அவனை அறிமுகம் செய்தும் வைத்தாள் அவள்...! அந்த அறிமுகத்திற்கு பின்னர், நாங்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தோம்.. சோனா விடுமுறை எல்லாம் முடிந்து தன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டாள். எப்போது எல்லாம் சோனாவிற்கும் அனிஷ்க்கும் வாக்குவாதங்கள் வருகிறதோ அப்போது எல்லாம் நான் தான் இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தேன்...! <br /> <br /> <br />I Was Just Helping Him Hold His Broken Heart

Buy Now on CodeCanyon