Surprise Me!

உச்சகட்ட மோதல்: விவேக்கை வார்ன் செய்த தினகரன்- வீடியோ

2017-12-05 25,581 Dailymotion

இளவரசி மகன் விவேக், சசிகலா அக்கா மகன் தினகரன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ஒருகட்டமாக உறவே இல்லை என்றாகிவிடும் என விவேக்கை தினகரன் எச்சரிக்கையும் செய்திருக்கிறாராம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் டி.டி.வி.தினகரனுக்குக் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. விவேக்குடன் நடந்த காரசார மோதல்தான் இதற்குக் காரணம். இதன் காரணமாக, ஜெயா டி.வி நிர்வாகத்திலும் விவேக் தரப்பில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் மன்னார்குடி சொந்தங்கள். இரட்டை இலையை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் தினகரன். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடியுள்ளன.

இலையை வீழ்த்திவிட்டால் அ.தி.மு.கவின் அடிப்படைத் தொண்டர்கள் தன்னுடைய தலைமை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறார் தினகரன். ஆனால், அவருடைய முயற்சிக்குக் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு இல்லை.
இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்ட தனது ஆதரவாளர்களையே பெரிதும் நம்பியிருக்கிறார் தினகரன். இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமனின் சமீபகால செயல்பாடுகளை தினகரன் விரும்பவில்லை. குடும்பத்தினர் அனைவரும் தனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என சந்தேகிக்கிறார் தினகரன்.

According to the AIADMK sources said that Dinakaran was very upset over the Ilavarasi son and Jaya TV MD Viveks management.

Buy Now on CodeCanyon