Surprise Me!

டெவில்ஸ் நைட்: ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்!- வீடியோ

2017-12-06 112 Dailymotion

அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நெப்போலியன், அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். கைபா பிலிம்ஸ் தயாரித்துள்ள 'டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்' என்ற படத்தின் மூலம் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஜெஸி ஜென்சென் ஒரு துடிப்பான காவல்துறை அதிகாரி (பில்லி ஜீன் ஃபின்னிக்). ஜெஸி, அயல்நாட்டு இராணுவப்பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான லேக் ஓரியன் பகுதிக்கு திரும்புகிறார். அமைதியான அந்த பகுதியில் நடைபெறும் தொடர் கொலைகளும், விவரிக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் அவரை பெரிதும் பாதிக்கின்றன. விசாரணையை துவக்குகிற அதிகாரி பின்னிக், தனது கேள்விகளுக்கான பதில்களை விட, அதிக கேள்விகளையே எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், தனது மரித்துப் போன நண்பருடைய சகோதரரை எல்லிஸ் (பாபி லேனென்) சந்திக்க, காதல் மலர்கிறது. விசாரணை வட்டம் விரிவடைந்துச் செல்ல செல்ல, இந்த அசாதாரண நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் நைன் ரூஜ் என்ற ஒரு அமானுஷ்ய சக்தி என்றும் இந்த நிகழ்வுகள் அதன் மறுபிறப்பைச் சுட்டிக்காட்டுவதாகவே உணர்கிறார் அதிகாரி ஃபின்னிக்.

Actor Nepoleon is making his debut in Hollywood through Devil's Night: Dawn of the Nain Rouge.

Buy Now on CodeCanyon