லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குண்டர் தடுப்புச்சட்டத்தை போல, தனியாக தடுப்புச் சட்டம் கொண்டுவந்தால் என்ன? என்று ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய சட்டம் கொண்டுவரும் வரை, சமூகவிரோதிகள் மீது தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தை பொது ஊழியர்கள் மீது ஏன் பயன்படுத்தக்கூடாது? என்றும் நீதிபதி கேட்டுள்ளார்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் பூபதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'எங்களது தாத்தாவின் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து, பத்திரப்பதிவு செய்தோம். முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தியும் பம்மல் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அப்போது மனுதாரரின் வக்கீல் என்.சுரேஷ், லஞ்சம் கொடுக்கவில்லை என்பதால் முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தியும், பத்திரப்பதிவை செய்யாமல் சார் பதிவாளர் இழுத்தடித்தார். இதுபோல தான் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது என்று கூறினார்.

In an order smacking of exasperation at the rampant and continuing corruption in government departments, particularly in registration departments, Justice N Kirubakaran of the Madras High Court has directed the state to seriously consider the above question.