காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் காஞ்சிபுரத்தை கலக்கிவந்த ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பின் அரசியல் ஆதாய கொலைகள் குறையும் என்று மக்கள் பெருமூச்சுவிட்டிருந்தனர். ரியல் எஸ்டேட் கொலைகள் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் ரவுடிகள், அரசியல்வாதிகளினால் கொலைகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2ஆம் தேதி காசிமேட்டை சேர்ந்த ரவிந்தரன் என்ற ரவுடி திருப்போரூரில் வெட்டி கொலை செய்யப்பட்டான்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மறைமலைநகரை சேர்ந்த அஸ்வின் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி சாலையில் முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டான்.
சென்னையை அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியை சோந்தவர் ரவி. திமுகவைச் சேர்ந்த இவர் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியின் தலைவராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார். 3பேர் கொண்ட மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ரவி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music

Inspiration:
By Ender Güney