ஆர்.கே.நகரில் விஷால் வேட்புமனுவை நிரகாரிக்க செய்ததற்கு பரபரப்பான பின்னணி காரணம் தெரியவந்துள்ளது.
விஷாலைப் பொறுத்தவரையில் தமிழ் நடிகராக இருந்தாலும், அவரை தெலுங்கு மொழி பேசுவோர் தங்களது மண்ணின் நடிகராகவே பார்க்கிறார்கள்.
அவருக்கான மார்க்கெட் தமிழகத்தில் இல்லை, ஆந்திராவில் இருக்கிறது என்றே கூறப்படுகிறது. ஆந்திராவிலும் கூட விஷாலை தமிழ் நடிகராகப் பார்க்காமல், தங்களது பிரதிநிதியாகவே பார்க்கிறார்கள்.வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான அளவு ஆதி ஆந்திரா சமூகத்தினர் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் காலம் காலமாக அதிமுகவின் பிரதான வாக்கு வங்கிகளில் முக்கியமானதாக இருந்து வருகிறார்கள். அதிமுக வேட்பாளராக நிற்கும் மதுசூதனனுக்கும் தாய்மொழி தெலுங்குதான்.
குறிப்பாக 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியாகவே ஆதி ஆந்திரா சமூகத்தினர் இருந்து வருகின்றனர். இந்த வாக்குகளை குறி வைத்துத்தான் விஷால் களம் இறங்கியிருக்கிறார். இதுதான் அதிமுக தரப்பை டென்ஷனாக்கியுள்ளது.

Here is the reasons of Vishal's nomination papers was rejected in the RK Nagar By Poll.