இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது.
இந்த போட்டியின் போது இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் அஸ்வின் மற்றும் புஜாரா குறித்து பேசி இருக்கிறார்.
மேலும் அவர் இந்திய வீரர்களின் விளையாட்டு திறமை குறித்து பேசியுள்ளார். அவர் அஸ்வின் குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆகியிருக்கிறது.
இதனால் கவாஸ்கருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் கவாஸ்கருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளுக்கு 299 ரன்கள் எடுத்த போது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிலர் மிகவும் மோசமாக பீல்டிங் செய்தார்கள். இதன் காரணமாக நிறைய முக்கியமான விக்கெட்டுகள் கை நழுவிப்போனது. மேலும் ஸ்லிப்பில் நின்ற வீரர்கள் சிலரும் முக்கிய விக்கெட்டுகள் சிலவற்றை தவறவிட்டார்கள்.

Third test match between India vs Sri Lanka held today in Delhi. Gavaskar speaks about Ashwin and Pujara fielding performance. He says that they have improve their self a lot in fielding.