Surprise Me!

கொலையாளி தஷ்வந்தை மும்பை முழுவதும் தேடும் தமிழக போலீஸ்..வீடியோ

2017-12-08 23 Dailymotion

மும்பை விமான நிலையத்தில் தப்பியோடிய கொலையாளி தஷ்வந்தை , மும்பை காவல்துறை உதவியுடன் தமிழக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தஷ்வந்தை உயிருடன் பிடிக்க சென்னையில் இருந்து கூடுதல் தனிப்படை காவல்துறையினர் மும்பை விரைந்துள்ளனர்
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார். கடந்த சனிக்கிழமை காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. வீட்டிலிருந்த நகை, பணமும் காணாமல் போயிருந்தது. மகன் தஷ்வந்தும் தலைமறைவாகியிருந்தார்.

தஷ்வந்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகித்தது. தஷ்வந்தை பிடிக்க மாங்காடு போலீசார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின் செல்போனையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவரது நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

Buy Now on CodeCanyon