Surprise Me!

கமிஷனுக்கு ஆசைப்பட்டு மாணவிகளின் உயிருடன் விளையாடிய சமையல் காண்ட்ராக்டர்- வீடியோ

2017-12-08 1,313 Dailymotion

கெட்டுப்போன ஐஸ் மீன்களை செவிலியர்களுக்கு உணவாக அளிக்கப்பட்டதால் தான் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. <br /> <br />சேலம் இரும்பாலையில் மோகன் குமாரமங்கலம் மருத்துவகல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் செவிலியர் பட்ட படிப்புகளை பயின்று வரும் வெளியூர்களை சேர்ந்த மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். விடுதியில் மாணவிகளுக்கு வாரம் மூன்று நாட்கள் அசைவ உணவு வழங்கப்படுகிறது. நேற்று மாணவிகளுக்கு மீன் சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் மீன் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். இரவு மீன் சாப்பாடு சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட காப்பாளர் உடனே ஆம்புலன்ஸ் மூலம் மாணவிகளை மருத்துவமனையில் அனுமதிக்க மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் சமையல் காண்ட்ராக்டரிடம் விசாரணை நடத்திய போது வெளி மாநிலங்களில் இருந்து கெட்டுப்போன ஐஸ் மீன்கள் குறைந்த விலைக்கு கிடைத்ததால் அதை வாங்கி வந்து சமைத்து மாணவிகளுக்கு உணவளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதேபோல் பல முறை விடுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவுகளை மாணவிகளுக்கு வழங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமையல் காண்ட்ராக்டரிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. பல ஆயிரம் பணத்தை கட்டி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு தரமான உணவு வழங்காமல் கமிஷன் கிடைக்கும் பேராசையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட சமையல் காண்ட்ராக்கடரின் உரிமத்தை கல்லூரி நிர்வாகம் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். <br />

Buy Now on CodeCanyon