பிரஷரில் வெடிக்கப்போவது யார் என இன்னும் 2 வாரங்களில் தெரியும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிபட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதேபோல் வேட்பாளர்களுக்கான சின்னமும் நேற்று ஒதுக்கப்பட்டது. பெரும் பஞ்சாயத்தில் இருந்த தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது.பெரிதும் எதிர்ப்பார்த்த தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றார்

மேலும் எந்த சின்னம் கொடுத்தாலும் அதை வைத்து எனக்கு வெற்றி பெற தெரியும் என்றும் அவர் கூறினார். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் ப்ரஷர் கொடுக்கவே இந்த சின்னத்தை தேர்ந்தெடுப்பதாக கூலாக பதில் கூறினார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஆர்கே நகரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாங்கள் எந்த பிரஷரும் இன்றி அமைதியாக வாக்கு சேகரிப்பதாக கூறினார்.

Minister mafoi Pandiyarajan tells we dont have any pressure. we are campaining in cool mode. who will blast in pressure will know within 2 weeks he further said.