மத்திய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதால் தமிழகம் உச்சகட்ட கொந்தளிப்பில் இருந்து வருகிறது. இப்போது தமிழக அரசும் மத்திய அரசுக்கு சளைத்தது அல்ல என்கிற வகையில் சொந்த மண்ணின் மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருப்பதற்கு எதிர்வினையாக மிகப் பெரிய பயங்கரமான விலையை கொடுக்கப் போகிறார்களோ என்கிற கவலையைத்தான் கொடுக்கிறது.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்; மீனவர்களை காக்க தனி அமைச்சகம் அமைப்போம் என வாய்ச்சவடால் உறுதி மொழி தந்தது பாஜக. ஆனால் இதற்கான துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை டெல்லி பாஜக அரசு.

கன்னியாகுமரி.... தென்கோடியில் இருக்கும் மாவட்டமாக அறியப்படுகிறதே... இது உண்மையில் தமிழுக்கான நாடாக இருந்தால் அது கன்னியாகுமரியில் இருந்தே தொடங்கும்.
ஆனால் எத்தனை பெரிய கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நவம்பர் 1ம் தேதி பல சூழியலாளர்கள் புயல் உருவாகிவிட்டது இவர்கள் ஏன் அறிவிக்க மறுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து டிசம்பர் 2, ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணவில்லை என செய்தி வெளியிடுகிறார்கள்.