டோணி மட்டும் அப்படி பேட் செய்யாவிட்டால் இந்தியாவை ஒரு வழி செய்திருப்போம் என்று தெரிவித்துள்ளார் இலங்கை வீரர் சுரங்கா லக்மல் தெரிவித்துள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, இலங்கையில் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது.
அதிலும், வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு ஆரம்பம் முதல் ஷாக் கொடுத்தார். போட்டிக்கு பிறகு லக்மல் நிருபர்களிடம் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சுரங்கா லக்மல் கூறியுள்ளதாவது: 29 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்து இந்தியா தத்தளித்தது. அப்போது நாங்கள் இந்தியாவை 40 ரன்னுக்குள் சுருட்டி விடுவோம் என்று நினைத்தோம் என்று கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அது இலங்கைக்கு ஒரு சாதனையாக மாறியிருக்கும்.

Suranga Lakmal, believes that his team could have bowled India out for their lowest total against Sri Lanka in the first ODI between the countries on Sunday.