சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை ராஜஸ்தானில் கொள்ளை கும்பல் சுட்டுக்கொன்றது. கொளத்தூர் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக் கடையில் கடந்த 16ஆம் தேதி 3½ கிலோ தங்க நகையும், 4½ கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக் கடையின் மேல் தளத்தில் துளைப்போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேமராவில் பதிவான புகைப்படத்தில் உள்ளவர்களும் வாடகைக்கு கடை கேட்டு வந்த வாலிபர்களும் ஒன்றுதான் என்று உறுதியானதால் அவர்களை பற்றிய முழு விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
தினேஷ் சவுத்திரி (17), நாதுராம் (25) ஆகிய இருவரும் சேர்ந்து நகைக் கடையில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள் என்பது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நாதுராமின் தந்தை உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Maduravayal police inspector Periyapandi killed in Rajastan by thefts. Kolathur inspector Munisekar iujured by the firing of thefts.