இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகிறது. தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் டெல்லி போலீசார் சேர்த்துள்ளனர்.

இடைத்தரகர் சுகேஷ் உடன் டிடிவி தினகரன் பேசிய குரல் சோதனையில் இரண்டு குரல்களும் ஒத்துபோவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தினகரன் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கடும் குடைச்சலை கொடுத்து வரும் தினகரனுக்கு மீண்டும் செக் வைத்துள்ளனர் டெல்லி போலீசார்.
ஆர் நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

Delhi Police filed additional charge sheet in a special court against TTV Dhinakaran in connection with the Election Commission bribery case.