Surprise Me!

சமையல் மந்திரம் திவ்யாவிடம் அரைகுறை போட்டோ கேட்ட சீரியல் தயாரிப்பாளர்- வீடியோ

2017-12-16 44 Dailymotion

சினிமாவில் இருக்கும் பெண்கள் நிறைய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைகள் அனுபவித்ததை தைரியமாக வெளியில் கூறி கூறிவருகின்றனர். பெண்கள் இப்போதெல்லாம் மிக தைரியமாக இருந்தால் தான் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. <br />இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி திவ்யா தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து மனம் திறந்துள்ளார். இவர் சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்தவர். அவர் கூறியதாவது, "நான் அப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு எனக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தன. ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அடுத்த நாள் நடிக்கப் போகிறேன், சீரியல் குழுவைச் சேர்ந்த ஒருவர் இரவு என்னை அரைகுறை ஆடையுடன் புகைப்படம், ஆடையில்லா புகைப்படம் ஆகியவற்றை அனுப்புங்கள் என்று கேட்டார். அந்த நேரம் பயப்படாமல் அவரை எதிர்த்து கேள்விகள் கேட்டதால் அவர் இறுதியில் என்னிடம் மன்னிப்பு கேட்டார்" எனக் கூறியிருக்கிறார். <br />

Buy Now on CodeCanyon