குஜராத்தில் 150 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறிய பாஜக வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி வெற்றியை பெற்றுள்ளது. குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 2 மாநிலங்களிலம் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. குஜராத்தில் 99 இடங்களை கைப்பற்றி பாஜக தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை தனது கோட்டையாக வைத்துள்ள பாஜக இம்முறையும் அதனை தக்கவைத்துள்ளது.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு இந்த தேர்தல் சம்மட்டி கொடுக்கும் என்றன. ஆனால் 99 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்றாலும் இது பாஜகவுக்கு பெரும் சரிவுதான் என கூறப்படுகிறது. பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என கூறியிருந்தது. ஆனால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது

BJP seats reduced due to Congress campaign down said Amitshah. Its not tough fight said Amitshah