ஒரே நேரத்தில் தல ரசிகர்கள், தளபதி ரசிகர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களை இம்பிரஸ் செய்துவிட்டார் மஞ்சிமா மோகன். க்வீன் மலையாள ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் மஞ்சிமா மோகன். இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விபரம் வருமாறு,
ஒவ்வொரு முறை ரசிகர்களுடன் சாட் செய்யும்போது கேட்கப்படும் மிகவும் கடுப்பேற்றும் கேள்வி எது என்று ஒருவர் கேட்டார். அதற்கு மஞ்சிமா, தல அல்லது தளபதி..இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கஷ்டம் என்றார்.
2017ம் ஆண்டில் வெளியான படங்களில் மஞ்சிமா மோகனுக்கு பிடித்தது விக்ரம் வேதா, பாகுபலி 2, மாநகரம், மெர்சல் ஆகியவையாம்.
மீம்ஸ் கிரியேட்டர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர்கள் அறிவாளிகள், ஸ்மார்ட், கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள் என நினைக்கிறேன் என்று மஞ்சிமா பதில் அளித்தார்.
நெகட்டிவிட்டியை எப்படி கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்றார். இது தளபதி விஜய் சொன்னது. மஞ்சிமா தளபதி ரசிகை என்பதை நிரூபித்துவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.

Actress Manjima Mohan had a chat session with fans on twitter. She impressed Thala, Thalapathy fans and Memes creators during the session.