என்னதான் குஜராத்தில் தட்டுத் தடுமாறி ஆட்சியை தக்க வைத்தாலும் கூட பாஜகவுக்கு 2017ம் வருடம் நிச்சயம் சாதனை வருடம்தான். மொத்தமாக 7 தேர்தல்களில் அது 6ல் வென்று அசத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி நிச்சயம் பாஜகவிடம் கற்றுத்தான் ஆக வேண்டும். 7 மாநில சட்டசபைத் தேர்தலில் 6 மாநிலங்களில் அது ஆட்சியைப் பிடித்தது சாமானிய விஷயமல்ல. அதிலும் உ.பியில் அது ஆட்சியைப் பிடித்த விதம் அடேங்கப்பா.. இன்னும் கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது.

உத்தரகாண்ட்டில் தொடங்கிய பாஜகவின் வெற்றிப் பயணம் தற்போது குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் வந்து நின்றுள்ளது. கோவாவில் பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் கூட கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.
உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. அதன் பிறகு வந்தது உ.பி. சட்டசபை தேர்தல்.

Though BJP had a tough time in Gujarat, 2017 was very good year for the ruling party in the centre. It has formed govts in 6 of the 7 states which faced polls.