அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ காட்சியை டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் ஜூஸ் அருந்திக்கொண்டே டிவி பார்க்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சசிகலா வீடியோ எடுத்தார் என்று தினகரன் கூறியிருந்தார். அதை வெளியிடும் போது வெளியிடுவோம் என்று கூறியிருந்தார் தினகரன்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றைய தினம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். பெரம்பலூர் எம்எல்ஏ வெற்றிவேல் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா உயிரோடுதான் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும் என்றும் அது தெரிந்துதான் தர்மயுத்தம் நடத்தினார் என்றும் இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றி வேல் கூறியுள்ளார். திண்டுக்கல் பூட்டு வரைக்கும் இது தெரியும் என்று கூறி திண்டுக்கல் சீனிவாசனை கூறினார்.

TTV Dhinakaran on release Video in Jayalalithaa apollo hospital. V K Sasikala, had shot a video of former Tamil Nadu chief minister J Jayalalithaa when she was undergoing treatment in Apollo Hospitals here last year. The footage released today.