சர்வதேச அளவில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில், அதை குறைப்பதற்கு, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இந்த விவகாரத்துக்கு நன்கு பரிச்சயமானவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் போதிலும், நமது நாட்டில், அதன் விலை அதிகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது வரைவு ஜிஎஸ்டி மசோதாவில் பெட்ரோல், டீசலை அதன் வரம்புக்கு வெளியே வைத்தது. ஆனால் தற்போது நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறீர்கள்.
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளின் ஆலோசனைக்குப்பிறகு முடிவு செய்யப்படும். கருத்தொற்றுமை ஏற்பட்டால்தான் இதை செய்ய முடியும்.

The centre is in favour of bringing petroleum products under the goods and services tax (GST) regime, but is waiting for a consensus to emerge among states, finance minister Arun Jaitley said on Tuesday. “As far as the central government is concerned, we are in favour of bringing petroleum under GST. Let me categorically state this. But we would await the consensus of the states and I do hope at some stage, sooner or later, the states agree to bring this inside GST,” Jaitley said in the Rajya Sabha.